18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை அருகே தண்டோரா அடித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..

மதுரை அருகே தண்டோரா அடித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் April 15, 2020, 6:04 pm

மதுரை அருகே கொரானாவை ஒழிக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், விழிப்புணர்வுடன் இருக்கவும் நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் தண்டோரா மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் கொரானா வைரஸை ஒழிக்கும் முயற்சியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி. வடிவேல்கரை, துவரிமான், கீழமாத்தூர், மேல மாத்தூர், கொடிமங்கலம் உள்ளிட்ட கிராம புறங்களில் பொது மக்களிடையே சமூக இடைவெளி. கடைபிடிக்கவும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதை தவிர அநாவசியமாக வெளியில் செல்லக்கூடாது என்றும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தண்டோரா மூலம் பொது மக்களுக்கு இன்று (15/04/2020) அறிவுறுத்தினர். அப்பகுதி மக்களும் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!