17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டம் ம மாத்தூர் கிராம மக்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் நிவாரண தொகுப்பு வழங்கிய சமூக ஆர்வலர்..

மதுரை மாவட்டம் ம மாத்தூர் கிராம மக்களுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் நிவாரண தொகுப்பு வழங்கிய சமூக ஆர்வலர்..

எழுதியவர்: ஆசிரியர் April 15, 2020, 5:23 pm

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு 21 நாட்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்ததோடு தடுப்பு வேலி அமைத்து மக்கள் வெளியே வராதப்படி செய்திருந்தனர்.

மதுரை மாத்தூர் கிராமத்தில் 2 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டால் அந்த கிராமத்தில் இருந்து மக்கள் வெளியே வராதப் படி தடுப்பு வேலி அமைத்து கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில் மாத்தூர் கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே இருந்தனர்.

மக்களின் கஷ்ட நிலையை அறிந்த  விஐபி பள்ளியின் தாளாளரும் சமூக ஆர்வலருமான சுரேஷ் அரிசி பருப்பு காய்கறிகள் முக கவசம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். அதோடு தனது பள்ளி வாகனத்தில் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்று விடுவீடாகவும் வழங்கினார். மேலும் நீடிக்கப்பட்ட தடை முடியும் வரை அத்தியாவசி பொருட்கள் வழங்க இருப்பதாக கூறினார்.

வேலைக்கு செல்ல முடியாமல் தவித்த அப்பதி மக்கள் நிவாரண பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றார்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!