18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடி பகுதிகளில் அசலை மிஞ்சும் போலிகள்..போலி ஸ்டிக்கர்களுடன் வலம் வரும் வாகனங்கள்..

சாயல்குடி பகுதிகளில் அசலை மிஞ்சும் போலிகள்..போலி ஸ்டிக்கர்களுடன் வலம் வரும் வாகனங்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 15, 2020, 4:55 pm

 பேராபத்தை ஏற்படுத்திய கொரானா வைரஸ் சமூக பரவல் காரணமாக பல லட்சத்திற்கும்  மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர பிற நிறுவனங்கள் பூட்டப்பட்ட  நிலையில்,  இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றவும் தடை விதித்து உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது.

இந்த நேரத்திலும் சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊர் சுற்றும் பலர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்கும் எண்ணத்துடன்  பலர் தங்கள் வாகனத்தில் போலி பிரஸ் ஸ்டிக்கர், போலிஸ் (INDIAN POLICE), வக்கீல், (எக்ஸ்)ஆர்மி, ரெவின்யூ, TNEB, என்றும், அதையும் தாண்டி சிலர் வாகன எண்ணிற்கு பதிலாக தங்கள் பெயர் மற்றும் கட்சிகள் பெயரை கலர்கலராக  இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டும் வலம் வருகிறார்கள். மேலும்  சிறுவர்களும் லைசென்ஸ் இல்லாமல் விதிகளை மீறி தைரியமாகவும் ஜாலியாக வலம் வருகிறார்கள். இவர்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காய்கறி மார்க்கெட் பஜார் பகுதியில் அதிவேகமாக வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்தும் விதமாக செல்வதும், பொதுமக்களுக்கு இடையூறாக பொதுஇடத்தில் திடீரென அதிக ஒலி எழுப்பி பயமுறுத்தும் விதமாக செல்வதுமாக இருக்கின்றனர்.

எனவே, இது சம்பந்தமாக போக்குவரத்துறையும் காவல்துறை அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்கள் கோரிக்கையாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!