17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் மருந்து அவசரம் ஸ்டிக்கர் ஒட்டி ஜாலி உலா! நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

செங்கத்தில் மருந்து அவசரம் ஸ்டிக்கர் ஒட்டி ஜாலி உலா! நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

எழுதியவர்: Askar April 15, 2020, 2:53 pm

செங்கத்தில் மருந்து அவசரம் ஸ்டிக்கர் ஒட்டி ஜாலி உலா! நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் மருந்துகள் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டி ஜாலியாக உலா வருகின்றனர் இதனை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை யாக காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் அவசர தேவைக்காக மருந்து அவசரம் மருந்துகள் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்ட பட்ட வாகனத்தில் சென்று வருகின்றனர்.

இதனைப் பயன்படுத்தி செங்கம் பகுதியில் சிலர் வாகனத்தில் மருந்து அவசியம் என ஸ்டிக்கர் ஒட்டி ஜாலியாக உலா வருகின்றனர். இதுகுறித்து செங்கம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மருந்துகள் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஓட்டிகளிடம் அவர்கள் சார்ந்த கடை அல்லது மருத்துவமனை குறித்து விசாரிக்க வேண்டும். சம்மந்தமில்லாமல் மருந்து அவசரம் ஸ்டிக்கரை ஒட்டி வரும் நபர்களிடம் செங்கம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!