18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மயிலாடுதுறை -அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகள்,சுகாதார – மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்

மயிலாடுதுறை -அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகள்,சுகாதார – மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்

எழுதியவர்: mohan April 15, 2020, 2:45 pm

தமிழகம் முழுவதும் 22 வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது, மேலும் அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்நிலையில் தரங்கம்பிடி பேரூராட்சி, திருக்களாச்சேரி ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக சுகாதார மற்றும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று சுகாதார மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி கணக்கெடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதார மற்றும் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் , சுகாதார ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இரா.யோகுதாஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!