தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்துள்ள பூக்கள் ஊரடங்கால் செடிகளிலே வீணாவதால்
விவசாயிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து உசிலம்பட்டி பூ சந்தை செயல்பட கோட்டாச்சியர் ராஜ்குமார் அனுமதியளித்தார்.இதில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் முகக்கவசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்தவர்கள் நாளடைவில் உசிலம்பட்டி பூ சந்தையில் பூக்களை விற்பனை செய்யும் விவசாயிகளும், பூக்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்டம் கூட்டமாக பூசந்தையில் குவிந்து வாங்கி செல்வதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணியாமலும், கைகளை சோப்பால் கழுவுதல் போன்ற எந்த முன்னெச்சரிக்கைகளும் செய்யப்படாததால் அரசு அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே உசிலம்பட்டி எஸ்ஓஆர் நகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உசிலம்பட்டி பூ சந்தையில் பொதுமக்கள் கூட்டமாக பூக்களை வாங்கி செல்வதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்
எழுதியவர்: mohan April 15, 2020, 2:12 pm




You must be logged in to post a comment.