திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி யில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி 2 பேர்களும் தற்போது சார்பில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இதனைத்தொடர்ந்து அந்த கிராமமே கடந்த 15 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த கிராமத்திற்கு வெளியாட்கள் யாரும் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய 1-வது வார்டு சுயோச்சை கவுன்சிலர் கணேசன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கிராமத்திற்குள் சென்று பொது மக்களுக்கு
உணவுப் பொருட்கள் வழங்க அரசிடம் முறையாக அனுமதி பெற்று பாதுகாப்புடன் அக்கிராம மக்கள் 350 குடும்பத்திற்கு காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் தனது சொந்த செலவில் இலவசமாக கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வழங்கினார்.
இதுகுறித்து கணேசன் கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில் ஊரடங்கு சட்டத்தில் இக்கிராமத்தில் தொற்று நோய் பரவியதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருப்பினும் எனக்காக வாக்களித்த கிராமம் மக்கள் ஒரு சிரமப்படும் போது என்னால் இயன்ற உதவியை செய்வதற்காக நேரடியாக மக்களைப் பார்த்து சின்ன சின்ன உதவிகளை வழங்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில்தான் அரசு அதிகாரிகளிடம் முறையாக அனுமதி வாங்கி சமூக விலகல் முறையைப் பின்பற்றி ஒவ்வொரு வீடாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் என்னால் இயன்றதை மளிகை பொருட்களை வழங்கினார் என தெரிவித்தார்.இன்றைய சூழ்நிலையில் தொற்று நோயை கண்டு உலக நாடுகளை அச்சத்தில் இருக்கும் நேரத்தில் மனித நேயத்தோடு நடந்துகொண்ட கவுன்சிலர் கணேசனின் மனிதநேய செயல்பாட்டை அக்கிராம மக்கள் மிகுந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்கள்.
மனிதநேயத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்திற்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கவுன்சிலர்
எழுதியவர்: mohan April 15, 2020, 1:40 pm




You must be logged in to post a comment.