செங்கத்தில் அரசு உத்தரவை மீறிய இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 144 தடை உத்தரவை மீறிய இரண்டு கடைகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சீல் வைத்தார்.
144 ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் செங்கம் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் இரண்டு ஜவுளிக் கடைகளை திறந்து சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்களிடம் வியாபாரம் செய்து வந்துள்ளனர் .அதைப் பார்த்த செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு மூர்த்தி மற்றும் காவல்துறை ஆய்வாளர் சாலமன் ராஜா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அங்கு சென்று திறக்கப்பட்ட கடையை மூடி இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து செயல்அலுவலர் திருமூர்த்தி கூறுகையில் : செங்கம் நகரில் அரசு உத்தரவை மீறி கூட்டத்தைக் கூட்டி வியாபாரம் செய்தால் சட்டப்படி கடைகளுக்கு சீல் வைத்து கடையின் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். உடன் தலைமை எழுத்தர் ரமேஷ் உட்பட போலீசார் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.