17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் ஓவியங்கள் மூலம் கொரானா விழிப்புணர்வு போலீசார் தீவிர பிரச்சாரம்

நிலக்கோட்டையில் ஓவியங்கள் மூலம் கொரானா விழிப்புணர்வு போலீசார் தீவிர பிரச்சாரம்

எழுதியவர்: mohan April 15, 2020, 1:34 pm

கொரானா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வருகிற  மாதம் 3  ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலக்கோட்டை போலீசார் கொரானா வைரஸ் போவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு அகம் நிலக்கோட்டை போலீஸ் நிலையம் நிலக்கோட்டை பஸ் நிலையம் மற்றும் தனியார் பள்ளி சுவர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாலங்கள் தடுப்புச் சுவர்கள், சாலையோர தடுப்பு சுவர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலக்கோட்டை போலீஸ் துறை மூலம் மூலமாக நூதன ஓவியங்கள் வரைந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.       இந்தப்  ஓவியங்கள் பிரச்சாரம் மூலம் பொதுமக்கள் வீட்டில் தனித்திரு விழித்திரு வீட்டில் இரு மற்றும் முதலை மனிதனை எப்படி விளங்கும் போன்ற படங்களை வரைந்து பொதுமக்களுக்கு கொரானா தாக்கம் குறித்து விழிப்புணர்வு படங்களை வரைந்து விழிப்புணர்வு செய்து தீவிரமாக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.     இந்த ஓவியங்களை நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், மற்றும் சமூக ஆர்வலர் கொங்கர்குளம் கருப்பையா ஓவிய சங்கங்கள் உள்பட பலர் இதில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரின் ஓவியங்களை காலை நேரத்தில் காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் வாங்க வரும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தோடு பார்த்து செல்கிறார்கள்.

நிலக்கோட்டை செய்தியாள் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!