கொரோனாவை தடுக்கும் வகையில் ஓவியம் மூலம் சுரண்டை பகுதியில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தென்காசி மாவட்டம் சுரண்டையில்கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் வணிக நகரமான சுரண்டையில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் அண்ணாசிலை அருகே வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிகரன் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.இதில் பின்வரும் விழிப்புணர்வு வாசகங்களுடன் ஓவியம் வரையப்பட்டுள்ளது
“நான் தான் கொரோனா”.
“விழித்திருங்கள் விலகி இருங்கள் வீட்டிலிருங்கள்”.
“உடலால் தனித்திருப்போம் உள்ளத்தால் இணைந்திருப்போம்.”
போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இதை தாசில்தார் ஹரிகரன், துணை தாசில்தார் சிவனு பெருமாள், ஆர்ஐ மாரியப்பன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.