17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் அகதிகள் முகாமில் தனி குடியிருப்பில் இருந்த சிங்கள வாலிபர் மாயம்? போலீசார் கலக்கம்

மண்டபம் அகதிகள் முகாமில் தனி குடியிருப்பில் இருந்த சிங்கள வாலிபர் மாயம்? போலீசார் கலக்கம்

எழுதியவர்: mohan April 15, 2020, 11:05 am

இலங்கையைச் சேர்ந்த ஜோய் மகன் அஜய் குமார்,30. சிங்களரான இவர், கடந்த 2017ல் எவ்வித ஆவணமும் இன்றி தனுஷ்கோடி வந்தார். சட்ட விரோதமாக ஊடுருவிய இவர் மீது கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையம், தனுஷ்கோடி காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட இவர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாம் தனி குடியிருப்பில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் மண்டபம் முகாம் அகதிகள் மறுவாழ்வு தனி துணை ஆட்சியர் சிவக்குமாரி, இலங்கை அகதிகள் குடியிருப்புகள் குறித்து நேற்று முன் தினம் ஆய்வு செய்தார். அப்போது அஜய் குமார் மார்ச் 17 ஆம் தேதி முதல் தனி குடியிருப்பில் இருந்து மாயமானது தெரிந்தது. அவரது புகாரின் பேரில் இலங்கை அகதிகள் சிறப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதே போல் இங்கு தனி குடியிருப்பில் போலீஸ் சிறப்பு கண்காணிப்பில் தங்கியிருந்த தயாபரராஜ்- உதயகலா தம்பதி தங்களது 3 குழந்தைகளுடன் கடந்த 10 மாதங்களுக்கு முன் மாயமனது குறிப்பிடத்தக்கது. கணவரின் சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் ஒரு மாதம் தங்கி விட்டு பின்னர் திரும்பி விடுவதாக உரிய . அனுமதி பெற்றுச் சென்ற இவர் அங்கிருந்து நியூசிலாந்து தப்பிச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!