17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காத்தாடி பறக்குது… உள்ளம் பதபதைக்கிறது… மின்சார விபத்துக்கான வாய்ப்பு… பெற்றோர்கள் கவனம் கொள்வார்களா??..

காத்தாடி பறக்குது… உள்ளம் பதபதைக்கிறது… மின்சார விபத்துக்கான வாய்ப்பு… பெற்றோர்கள் கவனம் கொள்வார்களா??..

எழுதியவர்: ஆசிரியர் April 14, 2020, 11:37 pm

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் பல பகுதிகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீடுகளிலிருந்து காத்தாடிகளை பொழுது போக்க பறக்க விட்டு வருகிறார்கள். இதனால் சில காத்தாடிகள் மின்சார கம்பிகள் மீதும், மேலும் உயர் மின் வயர்கள் மீதும் விழுவதாலும் சிக்கலும் மின்தடை ஏற்படுவதுடன், மின்சார விபத்துகள் ஏற்படும் ஆபத்தும் உண்டாகிறது.

இதனால் பொது மக்கள் அதிக இன்னலுக்கு ஆளாகிறார்கள். இதனை தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் மதுரை வட்டம் சார்பாக பொதுமக்கள் “யாரும் பட்டம் விட வேண்டாம்“ எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இதனால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுவதாகவும் அடிக்கடி மின் பழுது ஏற்படுவதாகும் தெரிவித்துள்ளார்கள் இதனால் பட்டம் விடுவதை பொதுமக்களும் சிறுவர்களும் தவிர்க்க வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!