17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுற்றித்திரியும் வாகனங்களை தடுக்க தமிழகத்தில் முதல் முறையாக ஸ்மார்ட் கார்ப் செயலி அறிமுகம்!

சுற்றித்திரியும் வாகனங்களை தடுக்க தமிழகத்தில் முதல் முறையாக ஸ்மார்ட் கார்ப் செயலி அறிமுகம்!

எழுதியவர்: ஆசிரியர் April 14, 2020, 10:17 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் காரணமின்றி சுற்றித்திரியும் வாகனங்களை கட்டுப்படுத்த ஸ்மார்ட் கார்ப் செயலியை அறிமுகப்படுத்தி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி வேலூர் சாலை ராமகிருஷ்ணா பெட்ரோல் பங்க் அருகே ஸ்மார்ட் கார்ப் செயலியை துவக்கி வைத்தார். காரணமின்றி வெளியில் சுற்றி வரும் வாகனங்களை கண்டறிந்து அவற்றை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும், பெட்ரோல் பங்குகளில் காவல்துறையினரின்அனுமதிக்கு பின்னரே ஒருமுறை மட்டும் பெட்ரோல் போடவும் ஒரே ஒரு பெட்ரோல் பம்பை மட்டும் உபயோகிக்கவும் பெட்ரோல் பம்ப் பணியாளர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்திள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!