தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் உணவின்றி தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு அரசு சார்பில் உணவுப்பொருட்கள், மலிகைப்பொருட்கள், காய்கறிகள் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எ.புதுப்பட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவால் உணவின்றி தவித்து வரும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர்க்கு தமிழக அரசு சார்பில் உணவுப்பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை வட்டாட்சியர் செந்தாமரை வழங்கினார். மேலும் அந்த பகுதி மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுடன் முககவசம் அணிவது, கை கழுவது போன்றவைகளை விளக்கினார். மேலும் வழக்கறிஞர் செல்லகிளி மற்றும் கிராம நிர்வாக அதிகாரி சுந்தரசேகர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.