மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கப்பட்டுள்ளது. இதனால்
பாதுகாப்பு இல்லாத சூழல் மற்றும் திடீரென மழை வந்தால் திறந்த வெளியில் அடுக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் முற்றிலும் சேதமடைந்து இழப்பு ஏற்படும் நிலை குறித்து சில தினங்களுக்கு முன்னர் விவசாயிகள் கோரிக்கையாக விடுத்திருந்தனர்.தற்போது திறந்த வெளியில் அடுக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே விவசாயிகள் , நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை,




You must be logged in to post a comment.