17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பூம்புகார் எம்எல்ஏ அவரது சொந்த நிதியிலிருந்து ரூ5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்கினார்.

பூம்புகார் எம்எல்ஏ அவரது சொந்த நிதியிலிருந்து ரூ5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்கினார்.

எழுதியவர்: mohan April 14, 2020, 5:39 pm

தனிமைப்படுத்தப்பட்ட திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் அவரது தனிப்பட்ட சொந்த நிதியிலிருந்து ரூபாய்5 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ கொண்ட அரிசி 3 கிலோ காய்கறி தொகுப்பு, கிருமிநாசினி 5 கிலோ கொண்ட 3,000/- பைகள் ஆகிய பொருட்களை செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தியாகராஜன், அருண் மற்றும் தரங்கம்பாடி தாலுக்கா வட்டாட்சியர் சித்ரா அரசு அதிகாரிகளிடம் பூம்புகார் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் பவுன்ராஜ் வழங்கினார்.முதற்கட்டமாக பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் பவுன்ராஜ் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி தியாகராஜன் அருண் மற்றும் வட்டாட்சியர் சித்ரா ஆகியோர் துப்புரவு பணியாளர்களுக்கு கிருமிநாசினி,அரிசி, காய்கறிகளை கொடுத்து துவங்கி வைத்தார்.

எம்எல்ஏ கொடுத்த அரிசி காய்கறிகளைக் திருக்களாச்சேரி ஊராட்சி மன்றத்தலைவர் சம்சாத்ரபிக், ஊராட்சி செயலர் மற்றும் எடுத்துக்கட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பைலட் , ஊராட்சி செயலர் மூலமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக கொடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி தியாகராஜன் மற்றும் வட்டாட்சியர் சித்ரா  கூறினார்.மேலும் பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் பவுன்ராஜ் கூறியதாவது. துப்புரவு பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகிய நீங்கள கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கே பணிபுரியும் நீங்கள் உலக மக்களே போற்றும் படியாக இருக்கின்றீர்கள். போராட்டப் பணியில் இறங்கி பாடுபடும் உங்கள் அனைவரையும் கொடிய நோயான கொரோனா கிருமியை நமது மக்களிடம் நெருங்க விடாது ஒழித்தவரையில் பாடுபடுங்கள், நானும் உங்களுடன் சேர்ந்து பாடுபடுவேன் என்றும், அனைவரையும் வாழ்த்திவணங்குகிறேன். உங்களின் தேவைகளை அறிந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் காத்திருக்கிறேன் என்றும், பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் பவுன்ராஜ் தெரிவித்தார்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!