17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பூம்புகாரில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் கருவாடு வியாபாரிகள் அரசு நிவாரண வழங்க கோரிக்கை.

பூம்புகாரில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் கருவாடு வியாபாரிகள் அரசு நிவாரண வழங்க கோரிக்கை.

எழுதியவர்: mohan April 14, 2020, 5:27 pm

21 வது நாளாக ஊரடங்கு நீடிக்கும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலாத்தலங்களில் மிகவும் பழைமையானது இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கருவாடு விற்பனை கடைகள் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் கருவாட்டு வியாபாரம் மிகவும் நல்ல நிலைமையில் விற்பனையாகி கொண்டிருந்தது. இதனால் ஒவ்வொருவரும் சுமார் இரண்டு லட்சம் முதலீடு செய்து மீன்களை வாங்கி ஆட்கள் வைத்து சுத்தம் செய்து மீன்களைப் வெயிலில் காயவைத்து கருவாடாக்கும் வேலையை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பூம்புகார், சின்னங்குடி மாணிக்கபங்கு, சந்திரபாடி ஆகிய பகுதிகளில் இருந்து மயிலாடுதுறைக்கு பேர்போன கருவாட்டு சந்தையில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கருவாடு குவியல்கள் வைத்து வியாபாரம் செய்யப்படும். இந்திய அரசு கொரோனா தொற்றால் 144 தடை உத்தரவு அறிவித்ததன் காரணமாக எந்த சந்தைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கருவாடுகள் ஏற்றுமதி செய்யப்படாததால், இருப்பு வைத்திருந்த கருவாடுகள் அனைத்தும் வீணாகி வருகிறது மேலும் கருவாடு கெட்டு போவமால் அதை உலரவைத்து பதப்படுத்துவதற்க்கு கூட ஆள் இல்லாததால் அனைத்தையும் கடலில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் அரசு இதற்கு உரிய கணக்கெடுப்பு செய்து நஷ்ட ஈடு வழங்க கருவாடு விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இரா. யோகுதாஸ்,மயிலாடுதுறை,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!