17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பி மதுரை தோப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உசிலம்பட்டி எஸ்ஓஆர் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வசித்த பகுதியை சுகாதார துறையினரால் சீல்வைக்கப்பட்டது.

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பி மதுரை தோப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உசிலம்பட்டி எஸ்ஓஆர் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வசித்த பகுதியை சுகாதார துறையினரால் சீல்வைக்கப்பட்டது.

எழுதியவர்: mohan April 14, 2020, 1:50 pm

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் சுகாதார துறையினர் தீவரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட எஸ்ஓஆர் நகரைச் சேர்ந்த 3 பேர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு வீடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மூவரையும் கொரோனா பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதால் அவர் மட்டும் வீடுதிரும்பினார். மேலும் இருவர் மதுரை தோப்பூரில் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வரும் நிலையில் காஜாமொகைதீன் (52) என்பவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் வசித்த உசிலம்பட்டி எஸ்ஓஆர் நகர் பகுதியில் வசிக்கும் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு ஆம்புலன்சில் சுகாதார துறையினர் அழைத்துசெல்கின்றனர்.கடந்த 2 நாட்களாக இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் எஸ்ஓஆர் நகர் பகுதி முழுவதும் சுகாதாரதுறையினரால் சீல்வைக்கபட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!