கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பித்த தேச ஊரடங்கு உத்தரவு, சமூக பரவலை மக்கள் சரியாக பின்பற்றாததால் மார்ச் 25ல் பிறப்பித்து இன்று (14.4.2020) நிறைவடைய இருந்த 21 நாள் 144 தடை உத்தரவு ஏப்.30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி இன்று அறிவித்தார். சமூக பரவலை மக்கள் பின்பற்றினால் தான் கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பை தடுக்கலாம் என அரசு
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 13 கடலோர மாவட்டங்களில் விசைப்படகுகள் தொழிலுக்கு 2 மாத மீன்பிடி தடை காலம் நாளை (ஏப்.15) முதல் தொடங்குகிறது. இக்கால கட்டத்தில் பல்வேறு நிபந்தனைகள் படி நாட்டுப்படகுகள் தொழிலுக்குச் செல்ல நேற்று (ஏப்.13) முதல் மீன்வளத்துறை அனுமதியளித்தது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதி மீனவர்கள் ஞாயிறு, செவ்வாய், வியாழன்ஆகிய கிழமைளில் தொழிலுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இந்த மீனவர்கள் தினமும் தொழிலுக்கு சென்று வருகின்றனர்.கரைக்கு கொண்டு வரும் மீன்களை காலை 7 மணிக்குள் வியாபாரம் செய்து விட்டு கலைந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் சமூக விலகலை பின்பற்றாமல் மீன்களை விற்க மீனவர்கள், கொள்முதல் செய்ய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்தனர். சமூக விலகலை பின்பற்றாத வியாபாரத்தால் கொரோனா வைரஸ் பரவல் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
சமூக விலகல் விதி மீறும் மீனவர்கள் கொரோனா தொற்று பரவும் அச்சம்
எழுதியவர்: mohan April 14, 2020, 1:34 pm




You must be logged in to post a comment.