17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெலிகிராம் செயலி மூலம் காவலர்களை ஒன்றிணைத்து காயமடைந்த காவலரின் சிகிச்சைக்கு உதவிய இராமநாதபுரம் எஸ்.பி.,..

டெலிகிராம் செயலி மூலம் காவலர்களை ஒன்றிணைத்து காயமடைந்த காவலரின் சிகிச்சைக்கு உதவிய இராமநாதபுரம் எஸ்.பி.,..

எழுதியவர்: ஆசிரியர் April 14, 2020, 12:03 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் செல்வகுமார், பணி முடித்து வீட்டிற்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரது சிகிச்சை செலவிற்காக இராமநாதபுரம் மாவட்ட காவலர்கள் மற்றும் பிற மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் அவரது நண்பர்களும் இணைந்து உதவிய தொகை ரூ4.45 லட்சத்தை அனைத்து காவலர்கள் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் வீ.வருண்குமார், செல்வகுமாரின் தந்தையிடம் வழங்கினார்.

அத்தொகையை பெற்று கொண்ட செல்வகுமாரின் தந்தை உரிய நேரத்தில் உதவிய அனைத்து காவலர்களுக்கும் அவரது குடும்பம் சார்பில் நன்றி தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரையும் டெலிகிராம் செயலி மூலம் ஒன்றிணைத்த முதல் வாரத்திலேயே இராமநாதபுரம் மாவட்ட காவலர் செல்வகுமாருக்கு உதவிட இச்செயலி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்பது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!