17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பணியாற்ற எஸ்பி உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பணியாற்ற எஸ்பி உத்தரவு

எழுதியவர்: mohan April 13, 2020, 5:45 pm

தமிழகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கவும், கடைகள் அனைத்தும் பகல் ஒரு மணிவரை திறந்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக டிவி., நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளது, இதனால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொருட்களை கொண்டு செல்வதிலும் பழுது நீக்க செல்வதிலும் பல்வேறு சிரமங்கள் இருந்தன .இது தொடர்பாக தமிழக அரசுக்கும் மாவட்ட காவல் நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத் தலைவர் மேகராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள் சக்கரவர்த்தி, பூப்பாண்டியன், சுப்புராஜ் உள்ளிட்டோ ராமநாதபுரம் எஸ்பி வருண்குமாரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு சிறப்பு அனுமதி வழங்கினார். இது குறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க பொறுப்பாளர் சக்கரவர்த்தி கூறுகையில்,சிறப்பு அனுமதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு, ராமநாதபுரம் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!