18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் விஷம் கலந்த இறைச்சியை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் இருந்த நாய்க்குட்டியை காப்பாற்றிய மருத்துவர்

மதுரையில் விஷம் கலந்த இறைச்சியை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் இருந்த நாய்க்குட்டியை காப்பாற்றிய மருத்துவர்

எழுதியவர்: mohan April 13, 2020, 3:49 pm

மதுரை பாசிங்காபுரம் சாய் பாபா கோவில் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் செல்ல பிள்ளையாக இருந்து காவல் காத்து வந்த நாட்டு நாய்க்குட்டிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர்.இதனால் அந்த நாய்குட்டி மயக்கமடைந்ததுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஆபத்தான நிலையில் இருந்த நாய்க்குட்டியை அருகில் குடியிருக்கும் கால்நடை மருத்துவர் மெரில்ராஜின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

உடனடியாக டாக்டர் மெரில்ராஜ் துரிதமாக செயல்பட்டுவிஷ முறிவு சிகிச்சை மேற்கொண்டு அந்த நாயின் உயிரைக் காப்பாற்றினார்.பின்னர்  காலை பரிசோதித்த கால்நடை மருத்துவர் மெரில்ராஜ் நாய்க்குட்டி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். கால்நடை மருத்துவர் மெரில்ராஜ் அவர்களின் செயலை அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!