இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆண்டாவூரணியைச் சேர்ந்தவர் சேவுகன். இவரது மகன் அமல்ராஜ், 29. கோயில்களில் சுவாமி சிலை சிற்பக்கலைஞர். இதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சக்திவேலின் மகள் பவானி, 23 . பொறியியல் பட்டதாரி. அமல்ராஜுக்கும் பவானிக்கும்
இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது. மூன்றாண்டுகளுக்கு முன் பதிவு திருமணம் கொண்ட நிலையில் பவானி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் ஊர் திரும்பிய பவானி, அமல்ராஜ் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பினார். இதனால் பவானி மீது அவரது வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் அமல்ராஜ் வீட்டில் பவானி இருப்பதை அவரது தாயார் மல்லிகா பார்த்து விட்டார். இதனால் பவானியை மல்லிகா, இவரது மகன் சிரஞ்சீவி ஆகியோர் கண்டித்தனர். இதனையடுத்து பவானி வீட்டிற்குச் சென்று அமல்ராஜ் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண் கேட்டனர். பெண் தர மறுத்ததால் காதல் ஜோடி இருவரும் இன்று காலை ராமநாதபுரம் வந்தனர். உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் ஐயனார் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு கோரி இராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
உறவுக்கார பெண்ணை மணந்த சிற்பக்கலைஞருக்கு பெண் வீட்டார் மிரட்டல்: ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்
எழுதியவர்: mohan April 13, 2020, 12:59 pm




You must be logged in to post a comment.