கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் முஹம்மது அயூப்கான், தாஜூல் அமீன் ஆகிய இருவரும் கீழக்கரை பகுதியில் வறுமையில் வாழும் வெளியில் உதவி கேட்ட தயங்கும் தேவையுடையோர்களை கண்டறிந்து உதவும் வகையில் கிழக்குத்தெருவை சேர்ந்த நண்பர்கள், நல்ல உள்ளம் படைத்தவர்களை ஒருங்கிணைத்து நம்ம தெரு நட்பு(N T N) என்ற வாட்ஸ் அப் குழுமத்தை கடந்த ஆண்டு ஆரம்பம் செய்து குழுமத்தின் அங்கத்தினர்கள் மூலம் நன்கொடைகள், ஸகாத்களை பெற்று ஏழை குடும்பங்களை கண்டறிந்து வழங்கி வருகின்றார்கள்.
இந்த அடிப்படையில் தற்போது கொரோன பிரச்சனைகளால் கீழக்கரை பகுதியில் மிகவும் ஏழ்மையில் வாழும் சுமார் 200 குடும்பத்தினர்களுக்கு தலா ரூபாய் 1000/=வீதம் பொருளாதார உதவி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நம்ம தெரு நட்பு குழுமத்தில் தகவல் வெளியிட்டனர். இதன் மூலம் நம்ம தெரு நட்பு குழுமத்தில் இருக்கும் அங்கத்தினர்கள் பலர் பொருளாதாரத்தை குழு
ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதன் முதல் தவணையை தேவையுடையோருக்கு வழங்கும் நிகழ்வு நேற்று கிழக்குத்தெரு பள்ளி அருகில் நம்ப தெரு நட்பு குழுமத்தின் உறுப்பினர்கள்,ஊரின் முக்கியஸ்தர்கள் சிலர் முன்னிலையில் நடைபெற்றது. முதல் தவணை தொகையான ரூபாய் 1,25,500/= பயனாளிகளுக்கு நேற்று முதல் வழங்கப்பட்டது.
இது சம்பந்தமாக நம்ம தெரு நட்பு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது அயூப்கான்,தாஜூல் அமீன் ஆகிய இருவரும் கூறுகையில், “எங்கள் வாட்ஸ் அப் தளத்தின் மூலம் பெறப்படும் தொகை மிகவும் ஏழ்மையில் இருப்பவர்கள்,வெளியில் கேட்க தயங்கும் மௌன ஏழைகளை அனைத்து தரப்பிலும் கண்டறிந்து தொகையை வழங்குவோம். பணம் பெற்றவர்களின் தகவல்களை அவர்களின் கண்ணியம் கருதி யாரிடமும் குறிப்பாக எங்கள் தள அங்கத்தினர்களிடம் கூட கூற மாட்டோம். இந்த நிதி முற்றிலும் நம்ம தெரு நட்பு வாட்ஸ் அப் தளத்தில் இருக்கும் அங்கத்தினர்களிடம் மற்றும் பெறப்பட்ட தொகையாகும். இந்த அசாதாரண சூழ்நிலையில் ஏழை மக்களுக்கு உதவ பொருளாதார உதவி வழங்கிய எங்கள் தள அங்கத்தினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்“ என்றனர்.












You must be logged in to post a comment.