கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளன இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு தகவல் கிடைத்தது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக குடிபோதையில் வந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்ததில் தண்டுகாரனஅள்ளி, மல்லசமுத்திரம்,நாகனம் பட்டி,சங்னம்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ள சாராயம் காய்ச்சி 1 லிட்டர் 1000 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்வதாக தகவல் அளித்தார் அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் தண்டுகாரனஅள்ளிபகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து கொண்டிருந்த சூரியா (25) மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த பூபதி (28)ச சங்கனம்பட்டியை சேர்ந்த கோபால கிருஷ்னன் (49) நாகனம்பட்டியை சேர்ந்த கந்தசாமி (38) ஆகிய நால்வரையும் கைது செய்து அவர் களிம் இருந்த 20 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து 200 லிட்டர் ஊறல் பானைகளை அழித்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் காய்ச்சிய 4 பேர் கைது 20 லிட்டர் சாராயம் பறிமுதல் 200 லிட்டர் ஊறல் அழிப்பு போலீசார் அதிரடி..
எழுதியவர்: Askar April 13, 2020, 10:34 am




You must be logged in to post a comment.