18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி தலைமை மாவட்ட மருத்துவமனையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு..

தென்காசி தலைமை மாவட்ட மருத்துவமனையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு..

எழுதியவர்: Askar April 12, 2020, 9:51 pm

தென்காசி தலைமை மாவட்ட மருத்துவமனையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவனை குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவனையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்பதை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை அணுகும் முறை, உடனடி உயர்தர சிகிச்சை, கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைகளை சிறப்பாக செய்து வரும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் குழந்தைகள் பிரிவு தலைமை டாக்டர் கீதா ஆகியோரின் சேவை பாராட்டத்தக்கது என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!