கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்.14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரானா வைரஸ் பரவாமல் இருக்க தூய்மை காவலர்கள், காவல், வருவாய் துறையினர் ஆகியோர் தெருக்ளுக்கு வரும் பொது மக்களை
பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இதர தேவைகளுக்காக வெளியில் செல்லும் மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க முகக் கவசம் இன்றி பலர் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை கோபி லட்சுமி, சமூக ஆர்வலர் கங்கா ஆகியோர் தினமும் நூறு முதல் 150 முகக் கவசங்கள் தயாரித்து தூய்மை காவலர்கள், காவல், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இவர்களை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.




You must be logged in to post a comment.