18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் தெரு நாய்களால் நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

செங்கத்தில் தெரு நாய்களால் நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

எழுதியவர்: Askar April 12, 2020, 7:42 pm

செங்கத்தில் தெரு நாய்களால் நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் பகுதியில் தெரு நாய்களுக்கு வினோதமான நோய் பரவி வருதால் மனிதர்களுக்கும் நோய் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து பொதுமக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலையை தொடர்ந்து செங்கம் டவுன் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு வினோதமான நோய் பரவி வருகிறது. அவைகளின் உடல்களில் ஒருவகையான நோய் பரவி வருகிறது.

தோலில் அரிப்பு ஏற்பட்டு நாய்கள் சொறிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் நாய்களின் தோல்கள் உறிந்துபோய் உள்ளன. இது சொறி நோயாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நோயினால் நாய்கள் பலமிழந்து சோர்வாக இருக்கின்றன. அவைகளின் மூலம் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எனவே செங்கம் பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை மருத்துவரை கொண்டு ஆய்வு செய்து அவைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!