தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்;தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வருபவர்கள் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முககசவம் அணிய தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பில் கருமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பூசாரி பட்டி , கோட்டையூர், கரிசல்பட்டி புதுப்பட்டி போன்ற கிராமங்களில் வாழும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கள்ளர் நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திரு.உக்கிரபாண்டி , பொருளாளர் ரகுராஜன் , நிர்வாகிகள் சிலம்பரசன் மற்றும் தங்கபாண்டி மதுரை மாவட்டம் நன்செய் புன்செய் விவசாய சங்கம் மற்றும் 58 கிராம கால்வாய் திட்ட இளைஞர்கள். சாா்பில் சௌந்திரபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.
உசிலை சிந்தனியா







You must be logged in to post a comment.