18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆர்பி.உதயக்குமார் ஆலோசனையில் ஈடுபட்டார்.

உசிலம்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆர்பி.உதயக்குமார் ஆலோசனையில் ஈடுபட்டார்.

எழுதியவர்: mohan April 12, 2020, 5:26 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்;தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வருபவர்கள் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முககசவம் அணிய தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

உசிலம்பட்டியை சுற்றியுள்ள செல்லம்பட்டி, பேரையூர், எழுமலை போன்ற பகுதியை சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் அந்தெந்த பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து அந்தெந்த பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவோர்களுக்கு முககவசம் மற்றும் கிரிமி நாசினி மருந்துகளை நிர்வாகிகளிடம் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் வழங்கினார். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்து கொண்டும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.பின்னர் உசிலம்பட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார். இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, நகரசெயலாளர் பூமாராஜா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!