மதம் பார்க்காமல் பரவிய கொரானாவும்..! மனிதம் பார்த்து வெல்லும் கேரளாவும்.!
உலகமே அச்சுறுத்தும் கொரானா வைரஸ் இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் தான் உள்ளே நுழைந்தது.
கேரளா, திருச்சூரை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் சீனாவின் வுகான் நகரில் தங்கி மருத்துவம் படித்து வந்த நிலையில் கேரளாவிற்கு வந்தார் அவருக்கு கொரானா உறுதியாக்கப்பட்டது.
இதில் அவர் சார்ந்த இந்து மதத்தை பார்க்கவில்லை.
பின்னர் இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 96 வயது நபரும், 89 வயது பெண்மணியும் கொரானாவால் பாதிக்கப்பட்டு கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில் அவர்கள் சார்ந்த கிறிஸ்தவ மதத்தை பார்க்கவில்லை
பின்னர் மலப்புரம் மாவட்டத்தில் கொரானா நோய் கண்டுபிடிக்கப்பட்ட 2 பேரும் டெல்லியிலிருந்து வந்தவர்கள்
இதில் அவர்கள் சார்ந்த இஸ்லாமிய மதத்தை பார்க்கவில்லை
அனைத்து மக்களையும் பற்றி கொள்ள கொரானா வைரஸ் தீவிரம் காட்டியதை அறிந்த, கேரளா முதல்வர் பினராய் விஜயன் கொரானா பாதிப்பை மாநில பேரிடராக அறிவித்து கொரானாவை ஒழிக்க அதி தீவிரம் காட்டினார்.
முதல்வருடன் கேரள சுகாதாரத்துறை மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் கே.கே. சைலஜா டீச்சரும் களத்தில் இறங்கினார்.
மருத்துவத்திற்கு 500 கோடியும், கடன்கள் வழங்கவும், இலவச ரேஷன் பொருட்களுக்கும் 2 ஆயிரம் கோடியும், சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு 1320 கோடியும்,
அந்த ஓய்வூதியம் வாங்காதவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு 100 கோடியும் என 20 ஆயிரம் கோடி ஒதுக்கினார் முதல்வர் பினராயி விஜயன் (ஒட்டுமொத்த இந்தியாவிற்கு வெறும் 15 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கினார் பிரதமர் மோடி)
மேலும் கொரானா ஒழிப்பு பேரிடர் பணிக்காக.. அவசர காலத்தில் மருந்துகள், உணவுகளை எடுத்துச் செல்லவும், பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்யவும் ஹெலிகாப்டர் சேவை வழங்கப்பட்டது.
அனைத்து அரசு பணியாளர்களும் பாதுகாப்போடு பணியில் அமர்த்தப்பட்டனர். துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தனர். மருத்துவர்களை மறுவாழ்வு தரும் உயர்ந்தவர்களாக கருதப்பட்டனர்.
காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு முழுமையாக கேரளா மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். பொதுமக்களும், அரசுதுறையினரும் கை கோர்த்து தியாக உணர்வோடு பணி செய்தனர்.
அதில் ஒன்று, டாக்டர் ஷிபா திருமணம் ஒத்திவைப்பு.
கண்ணூர் ஆஸ்பத்திரியில் டாக்டராகவும், பிரபல அறுவை சிகிச்சை நிபுனராகவும் இருக்கும் டாக்டர் ஷிபா, துபாயை சேர்ந்த அனுஸ் முகமது என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நிச்சயத்த நிலையில்,
ஷிபா பணிபுரியும் ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் நிறைய அமைக்கப்பட்டுள்ளதால் திருமணம் தற்போது வேண்டாம் என்று நிறுத்தியுள்ளார்.
இதுபற்றி டாக்டர் ஷிபா “ஒரு டாக்டரா எங்கள் கடமையை செய்றோம். இந்த தொற்றில் இருந்து கேரளத்தை மீட்க வேண்டும். இது தான் இப்போது என் எண்ணம்” என்கிறார்.
ஷிபாவின் இந்த உயரிய குணம் தான் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. ஷிபாவின் அக்காவும் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தந்து வருகிறாராம்..
இதே போன்று தான் கேரளா மக்கள் மதபாகுபாடின்றி அனைவரும் ஒரு தந்தையின் மக்கள் என ஒற்றுமையோடு வெளிபடுத்திய தியாக உணர்வை அரசு பயன்படுத்தி கொரானா அரக்கனை விரட்டினர்.
ஆனால் மற்ற மாநிலங்களில் கொடும் நோயுக்கும் மதம் பார்க்கப்படுகிறது. மதம் பார்க்காத கொரானாவிற்கு தமிழகத்தில் மத சாயம் பூசபட்டு மனித நேயம் மறைக்கபடுகிறது.
தப்ளிக் + பப்ளிக் என தினம் தினம் அரசே மத ரீதியாக பிளவுபடுத்தி பீலா விடும் கணக்குகளால்…
அழிக்க வேண்டிய வைரஸ் பற்றிய பயமில்லாமல், அடுத்த வீட்டு பாய்களை பற்றி பயப்படுகிறார்கள்.
பாய் வீட்டு நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுக்கப்பட்டது. முஸ்லிம் பெயரை கேட்டால் சிகிச்சை தராமல் விரட்டுகிறார்கள்.
“உதவி செய்கிறேன் என ஊருக்குள் பாய்கள் வந்தால் விடாதீர்கள், ஊரைவிட்டு தள்ளி வையுங்கள், இவர்கள் தரும் உணவை வாங்காதீர்கள், நிழலுக்கு ஒதுங்க கூட இடம் கொடுக்காதீர்கள் என வெறுப்புணர்வு ஊட்டப்படுகிறது.
இது போக, அரசிற்கு ஒத்துக்காமல் மக்களின் அலட்சியமும் கொரானா பெருக காரணமாகிறது.
லாக்டவுன் மதிக்காமல் பொறுப்பற்ற இளைஞர்கள் பைக்கில் சுற்றி போலிஸாரின் கோபத்திற்கு ஆளாகின்றனர்.
காவலரும், துப்பரவு தொழிலாளரும், மருத்துவர்களும், இன்ன பிற அரசு பணியாளர்களும் பணிசுமை அதிகமாகி மிகுந்த மன உளச்சலில் பணியாற்றுகிறார்கள்.
இவர்களின் தியாகத்தை ஊக்குவிக்கும் விதமாக ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு தயங்கிறது.
லாக்டவுனால் பாதிக்கப்படும் வீடில்லா ரோட்டோ மக்கள், வசதியில்லாத மக்கள், தினகூலி தொழிலாளர்கள், இயலாத எளியவர்கள் இவர்களின் உணவு உட்பட தேவையை பூர்த்தி செய்ய அரசின் வேகம் குறைவாகவே உள்ளது.
இதையெல்லாம் காணுகையில் தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களை விட முதன் முதலில் கொரானாவால் பாதிக்கப்பட்ட கேரளம் அழகான செயல்திட்டம் மூலம் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது.
இதனால் தான் “மனிதம் பார்த்து வென்ற கேரளா அரசும், கேரளா மக்களும்” என அனைவராலும் போற்றப்படுகிறது.
வெல்டன் சேட்டா..!
:- தக்கலை ஆட்டோ கபீர்




You must be logged in to post a comment.