17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் சேவையில் காவலர் குடும்பங்கள்

மக்கள் சேவையில் காவலர் குடும்பங்கள்

எழுதியவர்: mohan April 12, 2020, 5:18 pm

சென்னை¸ கீழ்பாக்கம் கார்டன் டி பி சத்திரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினர் ஊரடங்கு உத்தரவினால் சாலையில் ஆதரவற்று இருக்கும் சுமார் 100 நபர்களுக்கு தினமும் சென்று உணவு வழங்கி வருகின்றனர். டி பி சத்திரம் காவலர் குடியிருப்பு பல சிறப்புகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவலர்களின் பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு இக்குடியிருப்பு வளாகத்தில் சிங்கப் பெண்ணே என்ற பேட்மின்டன் விளையாட்டு அணி உருவாக்கப்பட்டு சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதுபோன்று கால்பந்து அணியும் செயல்படுகிறது. இந்த குடியிருப்பில் உள்ள இளைஞர்கள் அனைவரையும் கடும் சிரமப்பட்டு ஒன்றினைத்து நல்வழி படுத்தி வருகிறார் வேப்பேரி காவல் நிலைய தலைமை காவலர் திரு.வெங்கடேஷ் ராவ் அவர்கள். நாட்டுக்காக தங்களை அர்பப்ணித்து கொண்டு சேவையாற்றி வரும் காவலர்களுக்கு மத்தியில் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சலித்தவர்கள் இல்லை என நிரூபித்து காட்டியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!