17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆராவாரம் இல்லாமல் தினமும் பல்லாயிர கணக்கான மக்களுக்கு உணவு வழங்கி வரும் மதுரை நண்பர்கள் குழு…

ஆராவாரம் இல்லாமல் தினமும் பல்லாயிர கணக்கான மக்களுக்கு உணவு வழங்கி வரும் மதுரை நண்பர்கள் குழு…

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2020, 4:10 pm

மதுரை திருநகரில் PNS நண்பர்கள் குழு சார்பாக ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்களுக்கு 3 வேளையும் உணவு தயாரித்து வழங்கி உதவி செய்து வரும் PNS தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்க்கு மக்கள் மத்தியில் பாராட்டு குவிகிறது.

கொரோனா நோய் பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு தடை உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல் வேறு பகுதியில் பொதுமக்கள் அடிப்படை தேவைக்காக திண்டாடி வருகிறார்கள். அதே போல்  மதுரை மாவட்டத்திலும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்கள், உணவின்றி தவித்து வருகின்றனர்.

தேவையுடையவர்களின் துயர் துடைக்கும் வண்ணம் மதரை மாவட்ட நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று மதுரை திருநகரை சேர்ந்த PNS தன்னார்வ தொண்டு நண்பர்கள் மற்றும் தொழிலதிபர் S. ராஜா பூரண சந்திரன் ஆகியோர் ஒரு குழுவாக அமைத்து விதவிதமாக அறுசுவையான உணவுகளை தயாரித்து தேவையுடையோரை கண்டறிந்து தனமும் வருகின்றனர். இந்த 60 பேர் கொண்ட குழுவில் காலையில் 5 மணிக்கு முன்பாகவே காலை உணவு தயாரிக்கப்பட்டு, உணவு பொட்டலங்களாக கட்டுப்பட்டு 3 கார்கள், 1 மினி லாரி மற்றும் டூ வீலர்கள் மூலமாக தேவையுடையோர்களை தேடிச் சென்று உணவு பொட்டலங்கள், டீ, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் , முககவசம், கையுறை போன்றவற்றை வழங்கி வருகின்றார்கள்.

இக்குழு திருநகர், திருப்பரங்குன்றம், தனக்கன்குளம், திருமங்கலம், வாடிப்பட்டி, அரசு மருத்துவமனைகள். அலங்காநல்லூர்,சோழவந்தான், அச்சம் பத்து, கொடிமங்கலம், தன்ச்சியம் பிரிவு, ஒத்தக்கடை , ஆனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள் உட்பட மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து கடந்த 15 நாட்களாக தினமும் 3 வேளையும் 4500 பேருக்கு வெண் பொங்கல், தயிர் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், புளிசாதம் என்று உணவளித்து வருகின்றனர்.

மேலும் மதுரை மாவட்டத்தில் திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, காளவாசல், அரசரடி, சிம்மக்கல், கோரிப்பாளையம் , தல்லாகுளம், கலெக்டர் ஆபிஸ்,உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடமையாற்றும் பணியாளர்கள் , அரசு ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் இக்குழுவினர் தண்ணீர் பாட்டில், தேநீர், பிஸ்கட் உணவு வகைகளை வழங்கி வருகிறார்.

இப்பணியின் போது அரசாங்கம் வலியுறுத்தியுள்ள  சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து மாநகராட்சி வகுத்துள்ள கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைபிடித்து சமையல் செய்கின்றனர். ஆதரவற்றோருக்கு கருணைக்கரம் நீட்டும் இவர்களை பொதுமக்களும் மதுரை மாவட்ட நிர்வாகமும் உற்சாகபடுத்தி பாராட்டியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!