17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் ஊரடங்கு உத்தரவால் சுமார் இரண்டு மணி நேரம் மட்டும் திறக்கப்பட்ட இறைச்சி கடைகள்.

உசிலம்பட்டியில் ஊரடங்கு உத்தரவால் சுமார் இரண்டு மணி நேரம் மட்டும் திறக்கப்பட்ட இறைச்சி கடைகள்.

எழுதியவர்: mohan April 12, 2020, 1:29 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்;தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வருபவர்கள் அனுமதிக்கபடுகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள இறைச்சி கடை சந்தையில் ஞாயிற்றுகிழமை என்பதால் இறைச்சிகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவர்.கடந்த 2 வார ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியததாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சி வாங்கியதாலும் இந்த ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்க காவல்துறையினர் நேரக்கட்டுப்பாடு விதித்தனர்.இதன்படி காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே இறைச்சி கடைகள் திறக்க நகராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கபட்டு கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் 9 மணிக்கு அனைத்து இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் ஒரு சில இறைச்சிகடைகள் மூடப்படாத நிலையில் போலீசார் அரசு உத்தரவு படி கடைகளை மூட வலியுறுத்தினர். இறைச்சி கடைகள் வழக்கம் போல் மதியம் வரை செயல்படும் என எண்ணி வந்த பொதுமக்கள் கடைகள் அடைக்கப்பட்டதால் இறைச்சிகள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!