18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபத்தில் தூய்மை காவலர்களுக்கு பாஜக., சார்பில் அத்தியாவசியப் பொருட்கள்

மண்டபத்தில் தூய்மை காவலர்களுக்கு பாஜக., சார்பில் அத்தியாவசியப் பொருட்கள்

எழுதியவர்: mohan April 12, 2020, 1:01 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தூய்மை காலலர்களுக்கு பாஜக., சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜெயபிரகாஷ் நட்டா உத்தரவு படி,மாநில தலைவர் எல்.முருகன் அறிவுறுத்தல் படி, இராமநாதபுரம் மாவட்ட தலைவர் கே.முரளிதரன் வழிகாட்டுதல் படி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தூய்மை காலலர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.மண்டபம் கிழக்கு ஒன்றிய பாஜக., தலைவர் எம்.வி.கண்ணன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பி.பாலசுப்ரமணியன், மூத்த உறுப்பினர்கள் என்.ஞானகுரு ( மக்கள் நல்வாழ்வு மன்ற செயலாளர்), பி.முத்துக்குமார் (மண்டபம் கிரிக்கெட் கிளப் அணி தலைவர்), நகர் நிர்வாகிகள் ஏ.ரவி, எஸ்.ஞானசங்கர், எம்.ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு வழங்கினர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!