18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகுடஞ்சாவடியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் , காவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது..

மகுடஞ்சாவடியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் , காவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது..

எழுதியவர்: Askar April 12, 2020, 12:17 pm

மகுடஞ்சாவடியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் , காவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது..

கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அதன் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பணியாளர்களான மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் , காவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.இதில் சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மகுடஞ்சாவடி, நடுவனேரி , கனககிரி உள்ளிட்ட ஊராட்சிமன்ற தூய்மைப் பணியாளர்கள், மகுடஞ்சாவடி காவல்நிலைய போலீசாருக்கும் சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் முகக்கவசங்கள், கையுறைகள், சேனிடைசர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி. எம். செல்வகணபதி கலந்துகொண்டு உபகரணங்களை நேரில் சென்று வழங்கினார். இதில், முன்னாள் எம்எல்ஏ காவேரி, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர்கள் கமலக்கண்ணன் , மகேந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் மாணிக்கம், நாகேந்திரன் காக்காபாளையம் சரவணன், சுரேஷ்குமார், திருநாவுக்கரசு, வேல்முருகன் ராஜ்குமார், தப்பக்குட்டை சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!