17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் நல பாதுகாப்புக்கழகம்,கீழை நியூஸ், சத்திய பாதை மாத இதழ் மற்றும் சமூக அமைப்புக்கள் சார்பாக தொடரும் மனித நேய பணி…

மக்கள் நல பாதுகாப்புக்கழகம்,கீழை நியூஸ், சத்திய பாதை மாத இதழ் மற்றும் சமூக அமைப்புக்கள் சார்பாக தொடரும் மனித நேய பணி…

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2020, 12:17 pm

தற்போது கொரோன பாதிப்பால் உலகெங்கும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.தற்போது நிலவும் ஊரடங்கு உத்தரவு மற்றும் மக்கள் வெளியில் சென்று பொருளூட்டும் அசாத்திய நிலையில் எண்ணற்ற ஏழை மக்கள் கஷ்டம் அடைந்து வருகின்றார்கள்.இந்த நிலையில் அரசு, சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.

இந்த நிலையில் கீழக்கரையில் வறுமையில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல சமூக அமைப்பினர் உணவு பொருள்களை மனமுவந்து வழங்கி வருகின்றார்கள். இந்த வரிசையில் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், கீழை நியூஸ், சத்திய பாதை மாத இதழ் நிர்வாகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம், இஸ்லாமிய கல்விச் சங்கம், மஜ்மாவுல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக வறுமையிலும், அன்றாட பிழைப்பின்றி வாழும் ஏழைகளை கண்டறிந்து உதவி வழங்க வேண்டும் என்ற திட்ட வடிவினை உருவாக்கியதோடு,இந்த தகவலை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

இந்த அடிப்படையில் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், கீழை நியூஸ், சத்திய பாதை மாத இதழ் நிர்வாகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம், இஸ்லாமிய கல்விச் சங்கம், மஜ்மாவுல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக இது வரை ஐநூறுக்கும் அதிகமான ஏழை மக்களை கண்டறிந்து அரிசி, சமையல் பொருள்கள் மற்றும் உதவி தொகை வழங்கி இருக்கின்றார்கள்.

இது சம்பந்தமாக கீழை நியூஸ்,சத்திய பாதை மாத இதழ் சட்ட ஆலோசகர் சாலிஹ் ஹுசைன் கூறுகையில், “தற்போது நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையில் ஏழை மக்களின் நலன் கருதி சமூக அமைப்புக்கள்,தொண்டு நிறுவனங்கள், தன்னார்வவர்கள், மற்றும் வசதி படைத்த நல்ல உள்ளங்கள் உதவி செய்ய முன்வரவேண்டும்“ என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!