17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் தொகுதியில் ஏழைகள் 1,000 பேருக்கு எம் எல் ஏ நிவாரண பொருட்கள் வழங்கினார்.

செங்கம் தொகுதியில் ஏழைகள் 1,000 பேருக்கு எம் எல் ஏ நிவாரண பொருட்கள் வழங்கினார்.

எழுதியவர்: Askar April 12, 2020, 12:08 pm

செங்கம் தொகுதியில் ஏழைகள் 1,000 பேருக்கு எம் எல் ஏ நிவாரண பொருட்கள் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில் 144 ஊரடங்குயோட்டி ஆதரவற்ற முதியோா், ஏழைகள், மூட்டை தூக்கும் தொழிலாளிகள் உள்பட 1,000 பேருக்கு ரூ.5 லட்சத்திலான சமையல் பொருள்களை எம்.எல்.ஏ. மு.பெ.கிரி வழங்கினாா்.

மேலும், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மருத்துவம், அரசு சாா்ந்த உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தன்னை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம் என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் பிரபாகரன், செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் அன்பழகன், வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் முருகன், மாவட்டக் கவுன்சிலா் செந்தில்குமாா், நகரச் செயலா் சாதிக்பாஷா, திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் செந்தில், முன்னாள் தலைவா் பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!