இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு தலைமை மருத்துவமனையில் சலவை பணியிடம் கிடையாது. இதனால் நோயாளிகளின் படுக்கை துணிகள் போர்வைகள் ஆகியவை வெளியில் கொடுத்து துவைத்து சுத்தம் செய்யப்பட்டு வாங்கப்பட்டு வந்தது.
தற்போது கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக144 தடை உத்தரவினால் நோயாளிகளின் படுக்கை போர்வை போன்றவற்றை வெளியில் துவைக்க கொடுக்க இயலவில்லை இதனை தெரிந்துகொண்ட கீழக்கரை MASA மஹ்தூமியா சமூக நல அமைப்பு இன்று காலை துணி துவைக்கும் இயந்திரம் (வாஷிங் மெஷினை) கீழக்கரை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கியது. இந்நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், சிவலிங்கம், MASA மஹ்தூமியா சமுக நல அமைப்பு தலைவர் அகமது முகைதீன் மற்றும் நிர்வாகிகள் ஹாஜா,சிபாய்,பாசித்,சாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸ்..SKV சுஐபு




You must be logged in to post a comment.