வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி சாலையோர பஸ் நிலையம் அருகே சுகாதாரமின்றி1000 ரூபாய்க்கு விற்கப்படும் ஆட்டு இறைச்சி! தொற்றுநோய் பரவும் அபாயம்; மற்றும் கூடுதல் விலை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் தொற்றுநோய் பரவும் அபாயம் எந்தவிதமான அடிப்படை சுகாதாரமும் சமூக இடைவெளியின்றியும் முகத்தில் மாஸ்க் அணியாமலும் நெடுஞ்சாலை பஸ்நிலைய மரத்தடியில் ஆட்டு இறைச்சி கடை அமைப்பு. பொதுமக்கள் அதிகம் கூடும் வண்ணம் கூட்டமாக தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏதுவாக இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மக்கள் அன்றாட உணவிற்கே சிரமப்படும் நிலையில் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தரமில்லாத ஆட்டிறைச்சியை சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது…
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் சாலையோர வெட்டவெளியில் எந்தவிதமான சுகாதாரமும் இன்றி தொற்றுநோய் பரவும் விதமாக இச்சந்தர்பத்தை பயன்படுத்தி கூடுதல் விலையும் சுகாதாரமும் இன்றி இறைச்சி விற்பனை செய்வோர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்…




You must be logged in to post a comment.