18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலவசமாக பணம் தேவையில்லை! வங்கிகள் மூலம் நபர் ஒருவருக்கு 50,000 ரூபாய் கடன் வழங்க வேண்டும்:- இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில அரசுக்கு கோரிக்கை..

இலவசமாக பணம் தேவையில்லை! வங்கிகள் மூலம் நபர் ஒருவருக்கு 50,000 ரூபாய் கடன் வழங்க வேண்டும்:- இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில அரசுக்கு கோரிக்கை..

எழுதியவர்: Askar April 12, 2020, 12:38 am

இலவசமாக பணம் தேவையில்லை! வங்கிகள் மூலம் நபர் ஒருவருக்கு 50,000 ரூபாய் கடன் வழங்க வேண்டும்:- இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில அரசுக்கு கோரிக்கை..

பிரதமர் மோடி அவர்களின் உத்தரவை ஏற்று 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை தமிழகத்தில் நடைமுறை படுத்தப்பட்டது இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்ததே.

இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழைகள் மட்டும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அரசோ அல்லது சில தனிநபர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வரும் உணவு மற்றும் ரேஷன் பொருட்களை ஏழை மக்கள் வாங்கி கொண்டு வருகின்றனர் அதே நேரத்தில் நடுத்தர குடும்பத்தினர் இது போன்ற உதவிகளை வரிசையில் நின்று பெற முடியாத சூழ்நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

ஆகையால் தமிழக அரசு இலவசமாக பணமோ அல்லது ரேஷன் பொருட்களோ கொடுப்பதை விட்டு விட்டு வங்கியின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 50,000 வட்டி இல்லாத கடனாக கொடுக்க வேண்டும் இந்த பணத்தை பெற ரேஷன் கார்டு , ஓட்டுநர் உரிமம் , ஆதார் அட்டை , பான் கார்டு , ஓட்டர் ஐடி போன்ற எதாவது ஒரு அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு கடன் கொடுக்க வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவு போட வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.

அன்புடன் தடா ஜெ அப்துல் ரஹிம் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!