மதுரை மாவட்டம் மேலவளவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேக்கிபட்டி கிராமம் உடப்பன்பட்டியை சேர்ந்த கண் பார்வையற்ற இளைஞர் சத்தியராஜ் என்பவர் அவசர எண்.100ஐ அழைத்து, வயதான தாய் தந்தையுடன் உணவு சமைக்க அத்தியாவசிய பொருட்கள் ஏதுமின்றி மிகவும் சிரமபடுவதாக கூறினார்.
மதுரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனே, மேலவளவு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி சத்தியராஜ் வீட்டிற்கு நேராக சென்று, அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்தனர்.
ஆபத்துக்கு மட்டும் உதவுவது காவல்துறை அல்ல பசியில் வாடும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுமென எடுத்துக்காட்டாக காவல்துறை செய்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.