இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பிற மாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் இன்று (11.04.2020) அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கினார். அவர் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4,777 பேர் திரும்பியுள்ளனர். இவர்களில்1,190 பேர் அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 3,64,874 குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகையாக ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. ஏப். 2 தொடங்கிய பணிகள் 98 சதவீதம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மாவட்டத்தில் பதிவு பெற்ற அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் நலனுக்காக 9,338 பேருக்கு உதவித் தொகையாக தலா ரூ.1,000 மற்றும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. அமைப்புசாரா தொழில் ஓய்வூதியர்கள் 403 பேருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 15 அமைப்புசாரா தொழிலாளர் வாரியங்களில் பதிவுபெற்றுள்ள 18,634 தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படவுள்ளது.விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,729 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தகைய விதிமீறல்களை முற்றிலுமாக தவிர்த்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பி.சங்கர், இராமநாதபுரம் வட்டாட்சியர் வா.முருகவேல் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.







You must be logged in to post a comment.