18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே ஊரடங்கால் உணவின்றி தவித்த குரங்குகளுக்கு தான் சோ்த்து வைத்த சிறுசேமிப்பில் உணவு வாங்கி அளித்த 4வயது சிறுமி

உசிலம்பட்டி அருகே ஊரடங்கால் உணவின்றி தவித்த குரங்குகளுக்கு தான் சோ்த்து வைத்த சிறுசேமிப்பில் உணவு வாங்கி அளித்த 4வயது சிறுமி

எழுதியவர்: mohan April 12, 2020, 12:32 pm

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 144தடை உத்தரவு பிறப்பிக்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.மனிதா்களுக்கு உணவளிக்க அம்மா உணவகம் அரசு மற்றும் தன்னாா்வலா்கள் இருந்த போதும் விலங்குகளின் பாடு திண்டாட்டம்தான்.குறிப்பாக மலை அடிவாரத்தில் மனிதா்களை மட்டும் சாா்ந்து வாழும் குரங்குகள் கஷ்டப்பட்டு வருகின்றன.இதே போல் தான் மதுரை தேனி தேசியநெடுஞ்சாலையில் செட்டியபட்டி அருகே கணவாய்கேட் மலையடிவாரத்தில் சாஸ்தா கோவில் அமைந்துள்ள பகுதியில் 100க்கணக்கான குரங்குகள் உள்ளன.இக் கோவிலுக்கு வருவோா் அளிக்கும் உணவைச் சாப்பிட்டு இக்குரங்குகள் வாழ்ந்து வந்தன.இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் சாஸ்தா கோவில் புட்டப்பட கடந்த 20 நாட்களாக உணவின்றி தவித்து வந்தன குரங்குகள்.

இதனைப் பற்றி தன் தந்தை மூலம் அறிந்த செட்டியபட்டியைச் சோ்ந்த ஷஷ்டிகாஸ்ரீ என்ற ஒச்சாயிஎன்ற எல்.கே.ஜி படிக்கும் 4 வயது சிறுமி தனது சிறுசேமிப்பு பணத்தைக்கொண்டு உணவு கிடைக்காமல் போராடி வரும் விலங்கினங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற கூறியதன் அடிப்படையில் சிறுமி சேமித்து வைத்த பணம் ரூ: 1,800- ஐ-கொண்டு சாஷ்தா கோவிலில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கும் கடந்த 2 நாட்களாக உணவு வழங்கினாா்.இந்த உணவை தன் அப்பாவுடன் சென்று தானே குரங்குகளுக்கு வழங்கி விட்டு வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சிறுமியின் செயலைக் கண்டு பலரும் பாராட்டிவருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!