செங்கத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தினக் கூலித் தொழிலாளா் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தினக் கூலித் தொழிலாளா் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினாா். கரேனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், செங்கம் ஒன்றியம், குயிலம் ,மில்லத் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஏழை எளியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தினக் கூலித் தொழிலாளா்கள் வருமானத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனா்.
இதை அறிந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில துணை தலைவர் வழக்கறிஞர் S.MD அன்சர் மில்லத் தனது சொந்த செலவில் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். செங்கம் நகர செயலாளர் பர்மானுல்லா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் B. அப்ரோஸ் கான் நகர துணை செயலாளர் பர்கத்துல்லா, ஒன்றிய செயலாளர் முகமது பைசல் ஒன்றிய அமைப்பாளர் சையத் பாபு, ஒன்றிய துணை அமைப்பாளர் ஹனீப் ஒன்றிய பொருளாளர் ஹயாத் பாஷா மற்றும் இளைஞரணி அமைப்பாளர் முபாரக் அலி,M. முஜ்மில்கான், சான்பாஷா, ஷாருக்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.