செங்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலைகளில் பொதுமக்கள் உள்ளனரா எதுவும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதா கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து செங்கம் பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்காக காலை நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடமாடும் காய்கறி கடைகள் ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். புதிய பேருந்து நிலையம், மெயின்ரோடு மில்லத் நகர் போன்ற பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து புதுப்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வட்டாட்சியர் ஏ .எஸ். பார்த்தசாரதி ,மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் செங்கம் ஆய்வாளர் சாலமன் ராஜா, வருவாய்த்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்




You must be logged in to post a comment.