18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா பரவாமல் இருக்க ஊர்முழுக்க வேப்பிலை கட்டி மஞ்சத்தண்ணீர் தெளிக்கும் மஞ்சம்பட்டி..

கொரோனா பரவாமல் இருக்க ஊர்முழுக்க வேப்பிலை கட்டி மஞ்சத்தண்ணீர் தெளிக்கும் மஞ்சம்பட்டி..

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2020, 4:43 pm

மதுரை அருகே உள்ள மஞ்சம்பட்டி கிராமம் இக் கிராமத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.. இங்கு ஊராட்சி தலைவராக இருக்கும் பாரி தனது ஊர் மக்களை கொரானா தொற்றுவில் இருந்து பாதுகாக்க ஊர் எல்லை முழுவதும் வேப்பிலை கட்டி, ஊரில் உள்ள எல்லாதெருக்களிலும் காலை, மாலை இரு வேளையும் மஞ்சள் தண்ணீர் தெளித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி தெரு, தெருவாக கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே போல் ஊரடங்கு அமலில் இருப்பதால் வேலைக்கு செல்ல முடியாத ஏழை எளிய மக்களுக்கு தினமும் அரிசி, பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுத்து வருகிறார்.

அதோடு வயதான முதியவர்களுக்கு மூன்று வேளையும் தினமும் சாப்பாடு தயார் செய்து அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி வருகிறார். கொரானா காலத்தில் ஊராட்சி தலைவர் தனது சொந்த பணத்தில் மக்களுக்கு செய்து வரும் உதவி அவ்வூர் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

முக்கியமாக ஊர் எல்லையில் டேபிள் சேர் போட்டு ஒருவர் வெளியூரில் இருந்து வரும் மக்கள் இந்த ஊரில் யாரை பார்க்க செல்கிறார்கள், எவ்வளவு நேரம் தங்குகிறார்கள் என்ற விவரத்தை எழுதி வைத்து கொள்கிறார்கள். யாராவது காய்ச்சலோடு வந்து கொரானா போன்ற வைரஸ் பரவாமல் இருக்க தான் அப்படி எழுதி வைத்து கொண்டு கண்காணித்து கொள்வதாக கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!