கொரோனா கிருமித்தொற்று தடுப்பு 144 தடை உத்தரவு பிறப்பித்து 18 வது நாளான இன்று ஆக்கூர் ஊராட்சியில், செம்பனார்கோயில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி தியாகராஜன் அறிவுறுத்தலின் பேரில், ரூபாய் 50,000/- மதிப்புடைய நவீன கிருமிநாசினி தெளிப்பான் 2000 லிட்டர் கொள்ளளவு தேக்கத் தொட்டி வசதியுடன் கூடிய புதிய இயந்திரம் வாங்கப்பட்டது.மேலும் ஆக்கூர் ஆர்.கே. மருத்துவமனை சார்பாக ஊராட்சிக்கு ரூபாய் 20000/- மருத்துவர் பாலாஜி வழங்கினார். அப்பணத்தை கொண்டு 300 லிட்டர் கொள்ளளவு தேக்கத் தொட்டி வசதியுடன் கூடிய புதிய இயந்திரம் வாங்கப்பட்டது.
இந்த இரண்டு நவீன கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரங்களும் இன்று ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் அவர்களின் தலைமையிலும், செம்பனார்கோயில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி தியாகராஜன் அவர்களின் மேற்பார்வையில் ஆக்கூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கிவைக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஆலுவலர் முருகானந்தம், தன்னார்வலர்கள் மற்றும் ஆக்கூர் ஜமாத்தில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
இரா. யோகுதாஸ்,







You must be logged in to post a comment.