17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்…

சுரண்டை ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்…

எழுதியவர்: Askar April 11, 2020, 3:16 pm

சுரண்டை ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்…

ஆலங்குளம், சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா காசியாபுரம் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக கொரோனா நிவாரணமாக சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள், முககவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி காசியாபுரம் கற்குவேல் அய்யனார் திருமண மண்டபத்தில் வைத்து தொழிலதிபர் M.S.V.ரவி முத்தையா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கேப்டன் மரிய சாமுவேல், செழியன் ராமசாமி, நல்லூர் வியாபாரிகள் சங்க செயலாளர் தேசிங்குராஜன், காசியாபுரம் வியாபாரிகள் நலச் சங்க தலைவர் செ.தங்கசாமி, செயலாளர் A.ஆறுமுகபாண்டியன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவரும், தென்காசி மாவட்ட தலைவருமாகிய T.P.V.வைகுண்டராஜா மற்றும் ஆலங்குளம் வட்டாட்சியர் திருV.பட்டமுத்து ஆகியோர் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தனர். தொழிலதிபர் T.P.V.V.விபின் பேரமைப்பு தென்காசி மாவட்ட செயலாளர் V.கணேசன் மாவட்ட பொருளாளர் I.V.N.கலைவாணன் தொகுதி செயலாளர் V.G.S.கணேசன் செய்தி தொடர்பாளர் A.இம்மானுவேல் ராஜன்ஆகியோர் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை S.அறிவழகன், A.அருணாச்சலம், நயினார், கண்ணன், R.லிங்கராஜ், சங்கர், செல்லையா, ராஜா, P.முருகன் ஆகியோர்களால் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி காசியாபுரம் வியாபாரிகள் சங்கத்தினரால் நடத்தப்பட்டது.ஏழை எளிய மக்கள் பயன்பெற்றனர்.

மேலும்,சுரண்டை நல்ல சமாரியன் கிளப் மற்றும் ஓய்எம்சிஏ சார்பில் டேனியல் ராஜம்மாள் அறக்கட்டளை உதவியுடன் நான்காவது கட்டமாக சுரண்டை சுற்று வட்டார பகுதிகளான ஆலடிப்பட்டி குலையநேரி ஆகிய பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை எஸ்.ஸ்டீபன் தலைவர் பொன்ராஜ் செயலாளர் கிருபாகரன் பொருளாளர் ஜேம்ஸ் அழகுராஜா, ஆபிரகாம், சின்னத்துரை, மரியதாஸ், தனபால் ராஜசேகர், குலையநேரி சபை ஊழியர் எலிசா பிரான்ஸிஸ், சபை மூப்பர்கள் ஆசை ஆல்பர்ட், நடராஜன், ஆனைகுளம் கோவில் பிச்சை, சக்திதரன், மற்றும் செய்தி தொடர்பாளர் ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!