மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நுழைவாயில் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளார்கள். கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மூடப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் இன்றி கோவிலில் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களை மட்டும் நம்பி இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக எந்தவிதமான வருமானமும் இல்லாமல் தவித்து வருவதாகவும், அரசு எங்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்
அவர்கள் கூறுகையில், “பூவிற்பனை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். இதனால் எங்களுக்கு வாழ்வாதாரமே இதுதான். தற்பொழுது எங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என பூ வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.